Thursday, July 5, 2018

Good story

இந்த உலகில் பெரிய பிரச்சனை எது தெரியுமா?

ஒவ்வொரு மனித
உயிரும்
இவ் உலகில் தானே சிறந்தவன்

என்னை விட அறிவாளி யாரும் இல்லை என நினைக்கும் சில & பல மனிதர்களே இந்த உலகின் மிக பெரிய பிரச்சனை

உலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித்துவம் உண்டு

மனிதன் அனைத்து உயிரினங்களை விட
அனைத்து விதத்திலும்
உயர்ந்தவன் அல்ல

ஆமை மனிதனை விட அதிக காலம் வாழும்

மண்புழு தன் உடலின் எடையை விட 100 மடங்கு அதிக உணவை உண்ணும்

எறும்பு தன் எடையைவிட 50% அதிகம் உள்ள பொருளை தூக்கி செல்லும்

மீன் & தவளை மனிதனை விட.
மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்யும்
( லட்ச கணக்கில்)

மளிதன் எவ்வகையில்
உயர்வு

பரிமாண வளர்ச்சியால் ஏற்பட்ட
மனிதனின் மூளை (அறிவு )வளர்ச்சி

அந்த அறிவே
தன்னை
பெரிய அறிவாளி
திறமை சாலி
பொறுமை சாலி
பலசாலி
என மனிதஇனத்தை நம்ப வைக்கிறது

இதுவே அகங்காரமாக மாறுகிறது

நமது இந்த ஆணவமே இறையை அடைய தடுக்கிறது

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு  மனிதனும்
தான்  சாதாரண உயிரே என்று உணர்ந்து

நாமே சிறந்தவர்
என்ற
அகங்காரம்
ஆணவம்
தற் பெருமை
....
என அனைத்தையும்
ஒழிக்க & குறைக்க முயற்சி செய்வோம்

Story 3

!! *சொர்க்கமா..?? 😊💐 நரகமா..?? 👾🦂*!!

ஓர் முதியவர் தனது பேரனிடம்

பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

பேரன்: அது எப்படி தாத்தா?

முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

மது அருந்த பணம் வேண்டும்

சிகரெட் புகைக்க பணம் வேண்டும்

கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால் மகனே!

அன்பு காட்ட பணம்
தேவையில்லை

கடவுளை வணங்க பணம்
தேவையில்லை

சேவை செய்ய பணம் தேவையில்லை

விரதம் இருக்க பணம் தேவையில்லை

பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை

பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை

இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக....🤓😁😁😁😎😎

தினம் தவறாமல் நிச்சயம் இறைவன் நாமம் சொல்வோம்......🙋‍♂️👌🤝✍

நற்சிந்தனை.. 💖நற்பணி..💖  நல்வாழ்வு.. 💖

வாழ்க வளமுடன்..💖வாழ்த்துக்கள்..💖

Shot story 2

குட்டிக்கதை:

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை
கொண்டாடினார்கள்.

ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.

நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு  திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.

இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.

அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.

அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.

மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே?
அறிவில்லையா?" என்று கேட்டேன்.

அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.

அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.

நீதி:

இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது

குறிப்பு: சி்ரிக்க கூடாது

Shot story

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
.
""கலியுகம் "" என்பது இது தான் . *This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.
.
*True. Knowledge is nowadays very important than money in this world.*

-படித்ததில் பிடித்தது-

Sunday, July 1, 2018

Life in using story

​1.பத்து நிமிடங்கள் முன்னதாக:​

காலை ​6 மணிக்கு எழுபவரா நீங்கள்?​
​5.50க்கு எழுந்து பழகுங்கள்.​

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

​2.பத்து நிமிடங்கள் மௌனமாக:​

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் ​தியானம் பழகுங்கள்.​ அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது ​மௌனத்தில் இருங்கள்​.

​3.முப்பது நிமிடங்கள்:​

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். ​உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா​ என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக ​முப்பது நிமிடங்கள்​ புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.

​4.உணவில் ஒழுங்கு:​

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். ​முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.​

​5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:​

​​​Day Task.​​​ உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். ​நினைத்த அனைத்தும் நடப்பதை​ விரைவில் உணர்வீர்கள்.

​6.அடைசல்கள் அகற்றுங்கள்:​

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது ​அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.​

​7.மனிதர்களை நெருங்குங்கள்:​

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை ​நேசிக்கத் தொடங்குங்கள்.​ எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

​8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:​

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் ​அடுத்தது என்ன​ என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ​​​(WHAT NEXT?)​​​ இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

​9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:​

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே ​நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.​

​11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:​

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை ​புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.​ அது தானாகவே பெருகும்.

​12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:​

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று ​அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.​

​13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:​

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ​நகைச்சுவை உணர்வு,​ வாழ்வின் பூட்டப்பட்ட ​பல கதவுகளைத் திறந்துவிடும்.​

​14.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்:​

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் –
மகிழ்ச்சியாய் –
​வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்​ தீவிரமாகப் பங்கெடுங்கள்.

​புதிய சிந்தனை அல்ல இது....​

​புத்துணர்சியூட்டும் சிந்தனை.​🌸

Good time

ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.
போர்க்களம் எங்கும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
போரில் தோல்வி  அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காகக் காத்திருக்கிறான்.

இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனைக் கூப்பிடுகிறார். "என்ன வேலையாகக் கூப்பிட்டீர்கள் அண்ணா?...

தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி, சிறந்த சிவ பக்தன், பாடகன், தங்களை நன்கு அறிந்தவன், நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதைக் கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பிச் சென்றான்.

ராவணன் தலைமாட்டுக்கருகில்  நின்றான். காலடிஓசையைக் கேட்ட ராவணன் விழிகளைத் திறந்து பார்த்தான். ஒன்றும் பேச வில்லை.
ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்துக் காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான் மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை வீசினார்.
 "தம்பி...உபதேசம் அறிவுரைபோன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.
நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.

இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன்.
அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை.
"தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றிக் கூறுகிறேன்."

1. Smart Phone வாங்காதே.
Smart boy என்று பேர் வாங்கு.

2. Face Book-யை தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே.

உன் எதிரில் இருக்கும் மனிதர்களின் face தான் சிறந்த book.

3. கடைசியும் முக்கியமான ரகசியம் என்னவென்றால்...

Whats App Group-ல் சேர்ந்து time waste பண்ணாதே, family கூட பொழுதை கழித்தால்...

நீ ஹேப்பி !..
உன் family ஹேப்பி
😳😜😜😝
😳😜😜😝

ஆணவம், அகங்காரம், தற்பெருமை shot story

ஒருமன்னன் இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த ஞானி தன் குடிலுக்குள் சென்று விட்டார். மன்னன் திகைத்தான்.

”ஞானியே, நான் அரசன் வந்திருக்கிறேன்,வெளியே வந்து அருள் தாருங்கள்” .,அவர் வரவில்லை.

”நான் மன்னன் வந்திருக்கிறேன் ,வெளியே வாருங்கள்” .,
அவர் வரவில்லை.மன்னன் பொறுமை இழந்தான்.

“நான் இந்த நாட்டு மன்னன் நரசிம்ம வர்மன் வந்திருக்கிறேன்,உங்கள் அருளுக்காக”..

உள்ளிருந்தே ஞானி சொன்னார்.,”நான் செத்த பின் வா!”

மன்னன் குழம்பினான் .அமைச்சரைக் கேள்விக்குறி யுடன் பார்த்தான்.

அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளி களாக இருந்தனர்!

அவர் சொன்னார்” அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் நான் என்ற ஆணவத்தை;அதை துறந்து வரச்சொல்கிறார் ”என்று .

நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத் துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!

'நான்', 'எனது' என்ற அகந்தை எவனுக்கு இருக்கிறதோ அவன் துறவி வேடம் பூண்டாலும் துறவி அல்ல.

'நான்' என்ற அகந்தை எவனுக்கு இல்லையோ அவன் இல்லறத்தில் இருந்தாலும் துறவியே துறக்க வேண்டியது.., 'நான்' என்ற அகந்தையையே.

ஆம்.,நண்பர்களே..,

"EGO" (நான் என்னும் அகங்காரம்) என்பது,
கண்ணில் விழுந்த தூசு போன்றது.

அந்த தூசியை சுத்தம் செய்யாமல்
உங்களால் எதையும் காண இயலாது.

எனவே "EGO" (நான் என்னும் அகங்காரம்)
என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு
உலகத்தை பாருங்கள்.
Good luck boys........

Saturday, June 30, 2018

Hindu feeling story

🕉🔔🔔🔔🕉👳🏻‍♂🕉🔔🔔🔔🕉

​​சிறுமளஞ்சி சுடலையாண்டவர் •┈┈• ♨ ​ஆன்மீக குழு​​ ♨•┈┈•

🌴🌷🌴🌷🌴🌷🌴🌷🌴🌷🌴

​​இந்து சமயத்தில் பின்பற்றப்படும் விரதங்கள்​​

​Temple web site​ : www.SirumalanchiSudalaiAndavar.com

​Spiritual Group​ : http://sirumalanchisudalaiandavar.blogspot.com

​You tube channel​ : https://www.youtube.com/channel/UCnI2Ct1g46VzdvmRx5cpmzQ

இந்து சமயத்தில் என்னென்ன விரதங்களெல்லாம் பின்பற்றப்படுகின்றன என்பதைப் பற்றித் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்து சமயத்தில் என்னென்ன விரதங்களெல்லாம் பின்பற்றப்படுகின்றன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா...?

1. விநாயக விரதம்

வைகாசி மாதத்துச் சுக்ல பட்சத்து முதற் சுக்கிர வாரந் தொடங்கிச் சுக்ர வாரந் தோறும் விநாயகமூர்த்தியை எண்ணி விரதமிருப்பது.

2. விநாயக சஷ்டி விரதம்

இது கார்த்திகை மாதத்துக் கிருட்டிண பட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்ல பட்ச ஷஸ்டி ஈறாகிய 21 நாள்களும் விநாயகரை எண்ணி அநுட்டிக்கும் விரதமாம். இதில் 21 இழைகளாலாகிய காப்பு நாணினை ஆண்கள், பெண்கள் முறையே வல, இடக்கரங்களில் அணிந்து விரத சமாப்தியில் தட்சிணாதிகள் கொடுத்துப் போஜனாதிகள் அருந்த வேண்டும்.

3. கல்யாணசுந்தர விரதம்

இது பங்குனி மாதத்து உத்திர நட்சத்திரத்து அநுஷ்டிக்கும் சிவ விரதம்.

4. சுக்ல விரதம்

இது தை மாசத்தில் அமாவாசையில் சிவாஸ்திரமாகிய திரிசூலத்தைப் பொன்னால் அல்லது வெள்ளியினால் செய்து சிவமூர்த்திப் பிரதிமையில் சாத்தி ஆராதித்து விரதமிருப்பது.

5. இடப விரதம்

வைகாசி மாதத்தில் சுக்ல பட்ச அஷ்டமியில் இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பது.

6. தேவி விரதம் - சுக்கிர வார விரதம்

இது சித்திரை மாதத்துச் சுக்ல பட்சத்துச் சுக்கிர வாரம் முதல் பார்வதிப் பிராட்டியாரை எண்ணி விரதம் நோற்பது. இதில் சருக்கரை நிவேதனம் செய்தல் வேண்டும். இது சுக்ரகரன் அனுட்டித்தத் தினம்.

7. ஐப்பசி உத்திர விரதம்

ஐப்பசி மாதத்து உத்திர நட்சத்திரத்தில் பார்வதி தேவியாரை எண்ணி நோற்பது.

8. நவராத்திரி விரதம்

திதி விரதத்தில் கூறினோம். ஆண்டுக் காண்க.

9. கந்த சுக்ர வார விரதம்

ஐப்பசி முதற் சுக்கிர வாரந் தொடங்கி பிரதி சுக்கிர வாரந் தோறும் கந்தமூர்த்தியை எண்ணி அநுட்டிக்கும் விரதமாம்.

10. கிருத்திகை விரதம்

இது கார்த்திகை மாதத்துக் கிருத்திகை நட்சத்திர முதல் கிருத்திகை தோறும் கந்தமூர்த்தியை எண்ணி அநுட்டிக்கும் விரதம். இதில் உபவாசம் உத்தமம்.

11. கந்த சஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் சுக்ல பட்சப் பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் பலாதிகள் மிளகு முதலியன உண்டு விரதமிருப்பது உத்தமம். கூடாதவர் ஒரு போதுணவு கொண்டு சஷ்டியில் உபவாசமிருப்பது நலம்.

12. வைரவ விரதம் - மங்கல வார விரதம்

தை மாதத்து முதல் செவ்வாய்க்கிழமை முதல் பிரதி செவ்வாய்க்கிழமையிலும் அநுட்டிக்கும் விரதம்.

13. சித்திரைப் பரணி விரதம்

இது சித்திரை மாதம் பரணியில் நட்சத்திரத்தில் வைரவமூர்த்தியை எண்ணி அநுட்டிப்பது.

14. ஐப்பசிப் பரணிவிரதம்

ஐப்பசி மாதம் பரணியில் வைரவக்கடவுளை எண்ணி அநுட்டிப்பது.

15. வீரபத்திர விரதம்

செவ்வாய்க் கிழமை தோறும் வீரபத்திரக் கடவுளை எண்ணிச் செய்யும் விரதமாம்.

16. நட்சத்த்திரபுருஷ விரதம்

சித்திரை மாதம் சோம வாரங் கூடிய மூல நட்சத்திரத்தில் பொன்மயமான லட்சுமி நாராயண விக்கிரகங்களை ஸ்தாபித்துப் பூஜா தானங்கள் செய்தவர்கள் இஷ்ட சித்திகளை அடைந்து விஷ்ணுலோகம் அடைவர். இது நாரதனுக்கு ருத்திரர் சொன்னது.

17. ஆதித்தியசயன விரதம்

அஸ்த நட்சத்த்திரங் கூடிய சப்தமியிலாயினும் ஆதி வாரம் அஸ்த நட்சத்திரங் கூடிய சங்கிர மணத்திலேனும் உமா மகேச்வர விக்ரகத்தைச் சூர்ரிய நாமங்களால் விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்யின் தங்கள் பிதுர்க்களுடன் சிவலோகத்தை அடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

18. கிருஷ்ணாஷ்டமி விரதம்

மார்க்கசீரிஷ மாதம் முதல் 12 மாதத்தில் 12 கிருஷ்ணபட்ச அஷ்டமியில் சங்கரன் முதலியவர்களை விதிப்பிரகாரம் பூசித்துத் தானாதிகளைக் கொடுத்தால் முத்தி அடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

19. ரோகணி சந்திரசேகர விரதம்

சோம வாரமாயினும், மிருகசீரிட நட்சத்திரமாயினும் வந்த பூர்ணிமையில் சிவமூர்த்தியை விதிப்படி பூசித்து, விதிப்படி தானாதிகளைத் தரின் முத்தியடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

20. சௌபாக்கியசயனவிரதம்

சித்திரை மாதம் சுத்ததிரியைப் பூர்வான்னத்தில் உமாமகேச்வர விக்ரகங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து விதிப்படி பூஜாதானங்களைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது மச்சமூர்த்தி மநுவுக்குச் சொன்னது.

21. அனந்த திரிதியா விரதம்

சிராவண சுத்த திருதியை முதல் 12 திதிகள். இந்த விரதத்தை அநுசரித்துக் கௌரியை விதிப்பிரகாரம் பூஜித்துத் தானாதிகளைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

22. ரஸகல்யாணதிரிதியா விரதம்

மாசி மாதம் சுத்த திரிதியை முதல் ஆரம்பித்துக் கௌரியை விதிப்படி பூஜிப்பின் சத்தியுலகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

23. ஆர்த்தானந்த திரிதியாவிரதம்

உத்திராடம், பூராடம், மிருகசீரிடம், அஸ்தம், மூலம், இவற்றுள் எதிலாயினும் வரும் சுக்கில பட்சத் திரிதியையில் ஆரம்பித்து உமாமகேச்வர கல்ப பிரகாரம் பூசிக்கத் தேவி உலகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

24.அட்சய திரிதியா விரதம்

வைசாக சுத்த திரிதியையில் ஆரம்பிக்க வேண்டும். இதை அனுசரித்தவர்கள் ராஜசூரிய பலத்துடன் புண்ணியலோகத்தை அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

25. சாரஸ்வத விரதம்

இந்த விரதம் தாராபல சந்திர பல யுக்தமான ஆதி வாரத்தில் ஆயினும், தான் ஏதேனும் விரதத்தைச் செய்யப் புகுந்த சுப தினத்திலாயினும் ஆரம்பிக்க வேண்டும். இதை 13 மாதம் செய்ய வேண்டியது. இதில் சரஸ்தி பூசிக்கப்படுவள். இதனை அபுசரிப்பவர்கள் வித்தியாபி விருத்தியும் பிரமலோக பிராப்தியும் அடைவர். இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது.

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 ​சர்வம் சிவமயம்​ 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
 
        என்றும் இறைப்பணியில்

​சிறுமளஞ்சி சுடலையாண்டவர்​
                  ​ஆன்மீக குழு​

            ​வாட்சப் ல் இணைய​                              

             📲 +919486053609

     ⏰ ​ஒழுக்கம்!  கட்டுப்பாடு!​ ⏰
        👳🏻‍♂ ​இறைத்தொண்டு!​ 👳

Thinking story

முன்பொரு காலத்தில், ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தாராம்..
.
எப்பொழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவதும் வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன...
.
ஒரு நாள் விபத்தில் அவர் கால் காயமடைந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது...
.
சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதை யை தன் போக்குவரத்திற்கு உபயோக படுத்திக்கொண்டார்..
.
இது அப்படியே பல நாட்களாக தொடர்ந்தது..
சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்.. .
சில நாட்கள் மேற்கு... வடக்கு...
இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்ததாம்...
வழக்கத்துக்கு மாறாகவும் இருந்ததாம்.. ..
.
இதை பார்த்துவந்த பொது மக்கள் சிலர்.. ஒரு நாள் வணிகரை நிப்பாட்டி...
"ஏம்ப்பா.. கொஞ்ச நில்லு.
என்னாதுப்பா இது.. ஒரு நாள் கிழக்கா போற...
ஒரு நாள் மேற்கா.. ஒரு நாள் உடனே திரும்புற..
ஒரு நாள் ரொம்ப நேரமாகியும் காணல...
ஒரு நாள் வேகமா போற...
ஒரு நாள் மெதுவா.. .. ஒன்னும் விளங்கலயே... என்னாச்சு... "
.
" முன்ன மாதிரி இல்லங்க ...
இப்ப இந்த கழுதையோட உதவி தேவைப்படுகிறது....
கட்டாயத்துல இருக்கேன்...
நான் போ சொல்ற இடத்துக்கெல்லாம் இதை போக சொன்னேன்...
நான் சொல்ற மாதிரி போ சொன்னேன்... ஆனா இது கேட்கல... "
.
" அப்ப என்ன பண்ண? "
.
" அதுக்காக விட்டுட முடியாதுங்களே.
நமக்கு வேலையாகணும்...
அதே சமயத்துல கழுதை கூட லாம் மல்லுக்கட்ட முடியாது...
ஏன்னா அது கழுதை..
அதுக்கு சொன்னாலும் வெளங்காது.. .
.
அதனால... நான் கொஞ்சம் மாறிகிட்டேன்....
அது கிழக்கே போனா, நான் அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன்..
மேற்கே போனா அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன் ...
அது வேகமா போனாலும் பழகி கிட்டேன்...
.
கழுதைக்கும் இப்ப பிரச்சினை இல்ல..
நமக்கும் இப்ப பிரச்சினை இல்ல....
வாழ்க்கை நிம்மதியா போகுது "
....
இதே போல நம் வாழ்க்கை யும் நிம்மதியாக போக வேண்டுமானால்...
.
சில பல கழுதைகளுடன் அட்ஜஸ்ட் செய்ய பழகிக்க வேண்டும்....
 வாழ்க்கையில், அலுவலகத்தில் இப்படி நிறைய கழுதைகளுடன் அன்றாட பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
அதற்காக கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது...
.
அவிங்களுக்கு சொன்னாலும் புரியாது,
புரியவைப்பதும் கஷ்டம்...
.
அதனால் நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால், நம்ப வேலையும் நடக்கும்..
வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும்!

Time pass Small story

 ரமேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.

அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்...

# ரமேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான்.
"எதுக்காகப் பணம் வேணும்?.."

#அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்..
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

# அடமானமாய் என்ன தருவீங்க?

# ஆதிவாசி ஆள் குழப்பத்துடன் கேட்டார்...
“அடமானம்னா என்ன..?”!!

# “நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

# ஆதிவாசி ஆள் சொன்னார்...
“கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்”

# ரமேஷ் நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்...

சில மாதங்கள் கழித்து அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்து தன்னுடைய கணக்குப் புத்தகத்தை எடுக்கச் சொன்னார்...

# பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

# ரமேஷ் ஆச்சர்யமாக கேட்டான்...

“கடன் எல்லாம் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”

# அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்...
“லாபம் இல்லாமலா…? நிறைய கிடைச்சது"

ரமேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
#“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.

# “என்ன செய்யறது. பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

# 'இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆள் கிடைச்சுட்டான்’ என்று நினைத்தபடியே
ரமேஷ் கேட்டான்..

”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?”

# ஆதிவாசி கேட்டார்.
“டெபாசிட்னா என்ன…?”.

# ரமேஷ் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு…...

அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும்.

உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

“அடமானமாய் என்ன தருவீங்க?”😀😀😀

Super....😜
but
இவ்வளவு நாள் நமக்கு தோனாம போச்சே.....!
🤔🤔🤔🤔🤔
Like this story then share the link
Good lock Friend........

Friday, June 29, 2018

இந்துவின் பேரும்மை

இந்துவாக பிறக்க என்ன தவம் செய்தோம் நண்பர்களே.....

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!

கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே .!

எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள்
கூட சமநிலை அலைகளை பரப்புமடா
அடித்தவன் காதில் தெறிக்கும் போது
உற்சாக ஊற்று பெருகுமடா .....!

கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம்
அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில்
இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம் ........!

சாணம் கரைத்து
வீட்டில் தெளித்து
ஆன்டி-பயோடிக் செய்திடுவோம்
நாளும் தூய்மை காத்திடுவோம் .......!

மார்கழி பொழியும்
மாக்கோலம் வரைவோம் அதை
ஊர்வன உண்டு பிழைத்திடுமே
இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே .....!

ஈர நெற்றியில் காய்ந்த விபூதி
பட்டை அடித்து திரிந்திடுவோம்
தலை நீர் உறிந்து
தலை வலி குறையும்
அதிசயம் தன்னை நடத்திடுவோம் ...........!

குனிந்து நிமிர்ந்து பெண்களை எல்லாம்
வேலை செய்ய சொல்லிடுவோம்
இடுப்பு எலும்பு விலக்கம் அடைகையில்
சுக பிரசவம் தன்னை அடைந்திடுவோம் .......!

சூரியன்
உதிக்கும் முன்பும்
மறைந்த பின்பும்
உணவை கையில் தொடமாட்டோம்
இரவில் உணவு
ஜீரண குறைவு
அதிலும் அறிவியல் வைத்ததை
சொல்லமாட்டோம் .............!

தலையில் கொட்டி
கணபதி வணங்கி அந்நாளை
இனிதாய் தொடங்கிடுவோம்
நினைவாற்றலை நாளும் வளர்த்திடுவோம் .....!

சனியின் கண்ணில்
புற ஊதாக்கதிரை கண்டு
அவன் கண்ணை கருப்பு துணியால்
கட்டி வைத்தவன்  இந்துவடா......!

நாலாயிரம் நோயை ஒன்றாய் போக்கும்
அதிசயம் அறிந்தவன் இந்துவடா
துளசி மாடம் வீட்டில் வைத்து
வணங்கியது அந்த நோக்கமடா...........!

இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு
என்னிடம் வந்து கேளுமடா
விஞ்ஞானம் மெய்ஞானம்
இரண்டும் கற்ற அறிவியல் மேதை இந்துவடா
என் தாத்தன் பாட்டன் வாய்வழி
சொன்ன ஒற்றை நூல் தான்
உன் அறிவியல் என்பதை உணருமடா ....!
       நன்றி

மாற்றம் மட்டுமே மாறாதது

🐂🐂🐂🐂🐂🐂🐂*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

⚖ ​உண்மை​⚖

🏴பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு

​பால் திக்காக இருக்க​

🔸ஸ்டார்ச்சு,
🔸மைதா மாவு,
🔸டிடர்ஜண்ட்,
🔸யூரியா,
🔸சர்க்கரை,
 🔸குளுகோஸ்,
🔸பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

​பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது​

அதற்க்கு

🔻அமோனியா யூரியா,
🔻சோடியம் ஹைட்ராக்ûஸடு,
🔻கார்பன் ட்ரை ஆக்சைடு,
🔻பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது

​இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்​

🔹வயிற்றுப்போக்கு,
🔹பிரசர்,
🔹சர்க்கரை நோய்,
🔹ஹார்மோன் சீர்கேடு,
🔹பாலியல் கோளாறுகள்,
🔹சிறு வயதிலே பருவமடைதல்
🔹ரத்த சோகை ஏற்படும். 🔹சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது

​ஆதாரம்​

https://www.youtube.com/watch?v=mRwjp3tMh6o

🐄தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்

http://www.vikatan.com/article_amp.php?aid=8437

 ​பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்​

https://www.youtube.com/watch?v=N_JcUjg2l-M

​எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்​

🐄உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

​​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​​

​​நினைவு படுத்துவது நம் கடமை​​

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

​⚖ ​உண்மை​⚖

தமிழன் வீரம் மட்டும் விவேகம்.

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.

"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு அமெரிக்க மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இங்கிலத்து  மாணவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்றான் அட்டலாஇண்டிக் மாணவன்

""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''என்றான் பாக்ஸ்தான் மாணவன்...

""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.

பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.

மாணவர்களும் கரவொலி எலுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநோரம் பிடித்தது..

அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர் வேறு யாருமில்லை. இந்தியா வை சார்ந்த தமிழ் நாடு இல் உல்ல மாணவன். இந்த கதை பிடித்தல் லிங்க ஷேர் பண்ணுங்க பிரண்ட்........

சும்மா டைம் பாஸ்

இன்றைய நேயர் விருப்பம்.யார் யார்க்கு என்ன என்ன பாட்டு வேனும்.​


​ஸ்டாலின் :​ காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி....


​டிடிவி தினகரன் :​ சட்டி சுட்டதடா கைவிட்டதடா புத்தி கெட்டதடா


​திருநாவுக்கரசு :​ கனவு கானும் வாழ்கையாவும் கலைந்து போகும்  கோலங்கள்


​தமிழிசை :​ எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே


​கமல் :​ கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்


​ரஜினி :​ ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு  ராஜ்ஜியம் இல்லை ஆள

​எடப்பாடி :​ சொல்லி அடிப்பேனடி அடிச்சதுன்னா நெற்றி அடி தானடி

​கருணாநிதி :​ ஆடியடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே சொந்தமடா

​வைகோ :​ நானொரு ராசியில்லா ராஜா

​கனிமொழி  :​ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

​சீமன் :​ நானொரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க

​திருமாவளவன் :​ உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

​அன்புமணி :​ ஆசையே ஆலைப்போலே நாமெல்லாம் அதன்மேலே

​ஜி கே வாசன் :​ நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை

​மக்கள் :​ யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க....

இத்துடன் இன்றைய நேயர் விருப்பம் முடிகிறது.😀😀😀

முடிஞ்சா லிங்க ஷேர் பண்ணுங்க  பிரண்ட். 

Thursday, June 28, 2018

வழி தவறிய ஆடு




நீதி கதை
                 
                 ​ஆடு  மேய்ப்பவர்​ ஒருவர் இருந்தார் . அவரிடம் ஏராளமான ஆடுகள் இருந்தன. தினமும் அவைகளைப் புல்வெளிகளில் மேயவிட்டு , நீர் நிலைகளில் தண்ணீர் பருகச் செய்து, மாலை வேலைகளில் தொழுவத்தில் "பாதுகாப்பாக" அடைத்து வைப்பார் .
             

அவர் முன்னே நடக்க ஆடுகள் எல்லாம் அவர் பின்னே நடக்கும் . அவரின் சத்தம் கேட்கும் எல்லைக்குள்ளாகவே அவை மேய்ந்து கொண்டிருக்கும் .
               

அவரிடம் இருந்த ஒரு ஆட்டுக்கு இந்த வழக்கங்கள் "சலித்துப் போக" ஆரம்பித்தன.

காட்டில் எவ்வளவோ புல்வெளிகள் இருந்தும் அவர் காட்டும் புல்வெளியில்தான் மேய வேண்டியிருந்தது.

எவ்வளவோ நீர்நிலைகள் இருந்தும் அவர் காட்டும் நீர்நிலையில்தான் பருக வேண்டியிருந்தது.

சில நேரங்களில் பசியோடும் , தாகத்தோடும் கூட , அவர் மேய்ச்சலுக்கு இடம் காட்டும் வரை அவர் பின்னாலேயே நடந்து போகவேண்டும் .
             

அந்த ஆடு நினைத்தது ,

"எவ்வளவோ அருமையான நீர்நிலைகளும் , பசும் புல்வெளிகளும் , மாலையில் தங்கிக்கொள்ள நல்ல மறைவிடங்களும் இருக்கும் இந்த செழிப்பான காட்டில் நாம் ஏன் அடிமை போலக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் .

நினைக்கும் போதெல்லாம் தண்ணீர் .

பசி வந்த உடனே மேய்ச்சல் .

இதுதான் இனி நம் கொள்கை .

மற்ற முட்டாள் ஆடுகள் வேண்டுமென்றால் அடிமை வாழ்வு வாழ்ந்து கொள்ளட்டும் " .
               

ஆட்டின் சிந்தனை அதைத் தூங்கவிடவில்லை. மறுநாளே அதன் திட்டத்தை செயல்படுத்தியது.

மறுநாள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் வழியில் மெதுவாக ஒவ்வொரு அடியாய்ப் பின்வாங்கியது . இப்படியே முழு மந்தையும் முன்னே செல்ல விட்டுவிட்டு ஒரு மரத்தின் பின்பாகப் பதுங்கிக் கொண்டது.

ஆடுகளெல்லாம் கடந்து மறையும் வரை காத்திருந்துவிட்டு
சந்தோஷமாய் வெளியே வந்தது.
             
மேய்ப்பரின்
அடக்குமுறையில்லை , உண்ணவும் பருகவும் கட்டுப்பாடில்லை , கூட்டத்தோடு கூட்டமாய் அடைபட்டிருக்கத் தேவையில்லை .

எப்போதும் எதையும் செய்யலாம் , விடுதலை விடுதலை,
ஆடு உற்சாகமாய்ப் பாடியது . எங்கெங்கோ ஓடியது. குதித்தது. எல்லையில்லாத உற்சாகத்தில் மிதந்தது .
             

🌾🌾🌾
கொஞ்ச தூரத்தில் உயரமான புற்கள் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தது.

அந்தப்புற்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. இதுவரை மேய்ப்பன் ஒரு முறை கூட அதில் மேயவிட்டதே இல்லை .

ஆசையாய் ஓடி மேய ஆரம்பித்தது .
             
புதிய புல்லின் சுவையில் அது மெய்மறந்து மேய்ந்து கொண்டிருக்கும்போது,

🐺
திடீரென்று புற்களின் மறைவிலிருந்து ஒரு ஓநாய் வெளிப்பட்டு ஆட்டின் மேல் பாய்ந்து அதன் முதுகுப் பக்கத்தை அழுத்தமாய்க் கவ்வியது.

இதுபோன்ற ஆபத்தை இதுவரை ஆடு சந்தித்ததேயில்லை. வலியிலும் , மரண பயத்திலும் ஆடு அலறித்துடித்து , ஓநாயின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றது .

               
🐍
அப்போது எதிர்பாராத விதமாய் ஒரு மலைப்பாம்பு , புற்களிலிருந்து வெளிப்பட்டு ஓநாயை இறுக்கிக் கொண்டது . அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி , ஓநாய் தன்னுடைய மரணப் போராட்டத்தில் ஆட்டை  விட்டுவிட்டது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆடு அந்த இடம் விட்டு ஓடிப்போனது .
           

முதுகில் பலமாய்க் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. சொல்ல முடியாத அளவு வலி. தொண்டை வறண்டு போனது. தண்ணீர் எங்கேயாவது கிடைக்குமா என்று அதன் கண்கள் தேடின . தூரத்தில் ஒரு ஓடை தென்பட்டது .💦

 நடுக்கத்துடனும் ,வலியுடனும் அந்த ஓடையை நோக்கி ஓடியது.
             

தண்ணீரைப் பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியானது. வேகமாய் நெருங்கி நீரைப் பருக ஆரம்பித்தது. குளிர்ந்த தண்ணீர் தொண்டையில் இறங்குவது என்னவொரு நிம்மதி ? பட்ட துன்பங்களையெல்லாம் கொஞ்சம் மறந்தது. எல்லாமே ஓரிரு
நொடிகள்தான் .

🐊
தண்ணீரிலிருந்து ஒரு முதலை பாய்ந்து வெளிப்பட்டு ஆட்டின் பின்னங் காலைக் கவ்வியது.

அதன் கூரிய பற்கள் அழுத்தியதில் காலில் வலியும் , ரத்தமும் பெருக்கெடுத்தன .
               
" ஐயோ, இங்கும் ஆபத்தா ?"

ஆடு தன் முழு பலத்தையும் திரட்டிப் போராடியது. இன்னொரு காலை பலமாக உதைத்ததில் அந்த உதை சரியாக முதலையில் கண்ணில் விழுந்தது. முதலை கொஞ்சம் தடுமாறிப் பிடியை விடுவித்தது . தப்பிப் பிழைத்த ஆடு , ரத்தம் சொட்டச் சொட்ட ஓடியது.
             

"ஒரே நாளில் எத்தனை ஆபத்துகள் ? எஜமானுக்குப் பின் செல்கையில் இதெல்லாம் என்னவென்று கூடத் தெரியாதே!

நான் எதை அடிமைத்தனம் என்று நினைத்திருந்தேனோ அதுதான் இதுவரை என்னைப் பாதுகாத்து வந்திருக்கிறது .

எஜமான் நம்மை இடம் பார்த்து மேய்த்தது இதற்காகத்தான் போலும்

" கதறி  அழுதபடி ஓடியது .
           
எஜமானரை நினைத்துக் கண்ணீர் பெருகியது.

" எஜமான் தம்முடைய கோலால்  வேண்டுமானாலும் என்னை நன்றாக அடிக்கட்டும் . நான் இனி அவரை விட்டுப் பிரியவே மாட்டேன் " என்று எண்ணியபோது , ​எஜமானின் குரல்​ அதன் காதில் தேனாய் விழுந்தது.

தூரத்தில் அவர் ஆட்டின் கதறலைக் கேட்டு ஓடிவந்து கொண்டிருந்தார்.
           

" என்னை நல்லா அடிங்க எஜமானே. புத்தி வர்ர வரைக்கும்
அடிங்க " ஆடு மனதுக்குள் புலம்பியது .

மேய்ப்பர் அருகில் வந்து விட்டார் . ஆனால் அவரது முகத்தில் கோபமில்லை . கண்களில் கண்ணீர் ,

" இப்படி காயம் பட்டு வந்துருக்கியே செல்லம் . இனிமே என்னை விட்டு எங்கேயும் போகாதே " . அவர் வேறு எதுவுமே சொல்லவில்லை . ஆட்டைத் தூக்கி ​மார்போடு அணைத்துக் கொண்டார்​ .

அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அதன் நெற்றியில் தெறித்தது.



கதைஇன் நீதி.
     நாம் எவ்வளவோ வழிகளை நாம் நமக்காக உண்டு பண்ணிக் கொள்ளலாம்,

அது நம் பார்வைக்கு நலமானதாகவும் தோன்றலாம் . 

ஆனால் அதன் முடிவு ? 

​அவரது வழிநடத்துதலே இன்பம்​ .