ஒருமன்னன் இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.
அவன் வருவதைப் பார்த்த ஞானி தன் குடிலுக்குள் சென்று விட்டார். மன்னன் திகைத்தான்.
”ஞானியே, நான் அரசன் வந்திருக்கிறேன்,வெளியே வந்து அருள் தாருங்கள்” .,அவர் வரவில்லை.
”நான் மன்னன் வந்திருக்கிறேன் ,வெளியே வாருங்கள்” .,
அவர் வரவில்லை.மன்னன் பொறுமை இழந்தான்.
“நான் இந்த நாட்டு மன்னன் நரசிம்ம வர்மன் வந்திருக்கிறேன்,உங்கள் அருளுக்காக”..
உள்ளிருந்தே ஞானி சொன்னார்.,”நான் செத்த பின் வா!”
மன்னன் குழம்பினான் .அமைச்சரைக் கேள்விக்குறி யுடன் பார்த்தான்.
அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளி களாக இருந்தனர்!
அவர் சொன்னார்” அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் நான் என்ற ஆணவத்தை;அதை துறந்து வரச்சொல்கிறார் ”என்று .
நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத் துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!
'நான்', 'எனது' என்ற அகந்தை எவனுக்கு இருக்கிறதோ அவன் துறவி வேடம் பூண்டாலும் துறவி அல்ல.
'நான்' என்ற அகந்தை எவனுக்கு இல்லையோ அவன் இல்லறத்தில் இருந்தாலும் துறவியே துறக்க வேண்டியது.., 'நான்' என்ற அகந்தையையே.
ஆம்.,நண்பர்களே..,
"EGO" (நான் என்னும் அகங்காரம்) என்பது,
கண்ணில் விழுந்த தூசு போன்றது.
அந்த தூசியை சுத்தம் செய்யாமல்
உங்களால் எதையும் காண இயலாது.
எனவே "EGO" (நான் என்னும் அகங்காரம்)
என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு
உலகத்தை பாருங்கள்.
Good luck boys........

No comments:
Post a Comment